தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
தி.மு.க.,வினர் கொண்டாட்டம்ஓசூர், செப். 30-தமிழக, துணை முதல்வர் பதவி அமைச்சர் உதயநிதிக்கு வழங்கப்பட்டதை கொண்டாடும் வகையில், ஓசூர் மாநகர, தி.மு.க.,வினர், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில், தாலுகா அலுவலக சாலையிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.* கிருஷ்ணகிரி நகர, தி.மு.க., சார்பில், ரவுண்டானா அருகில், நகர செயலாளர் நவாப் தலைமையில், நகர்மன்ற தலைவர் பரிதா நவாப் முன்னிலையில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.