உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கழுதை தலை துண்டித்து திருட்டு

கழுதை தலை துண்டித்து திருட்டு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் ஆனந்த், 43, சலவை தொழிலாளி. அப்பகுதி ஏரிக்கரையோரம் கொட்டகை அமைத்து, 20 கழுதைகளை வளர்க்கிறார். சிலர், கழுதை முடி மற்றும் கோமியத்தை கேட்ட போது மறுத்தார். இதனால் பலர் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தனர்.நேற்று அதிகாலை கொட்டகைக்கு ஆனந்த் சென்ற போது, 10 வயதான பெண் கழுதை, வெட்டப்பட்டு கிடந்தது; தலையை காணவில்லை. இதுகுறித்த புகாரின்படி, நரபலி கொடுக்க இச்சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி