டிரைவருக்கு அரிவாள் வெட்டுபேக்கரி மாஸ்டருக்கு காப்பு
கிருஷ்ணகிரி, டிச. 4- காவேரிப்பட்டணம் அடுத்த தேர்பட்டியை சேர்ந்தவர் ஹரிதரன், 19, டிரைவர். திம்மாபுரம் பக்கமுள்ள தோப்போவனம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 50. ஹரிதரின் வீட்டு நாய், கிருஷ்ணமூர்த்தியின் கோழியை கடித்துள்ளது. இதனால் கடந்த, 1ல், கிருஷ்ணமூர்த்தி தேர்பட்டியில் ஹரிதரன் வீட்டிற்கு அரிவாளுடன் சென்று தகராறு செய்தார். அந்த நேரம் ஹரிதரனின் தந்தையை தாக்க முயன்றார். அவரை காப்பாற்ற, ஹரிதரன் முயற்சித்த போது, ஹரிதரனுக்கு முதுகில் வெட்டு காயம் ஏற்பட்டது. ஹரிதரன் புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.