கண்டக்டரின்றி அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் இடமாற்றம்
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, தேன்கனிக்கோட்டைக்கு கடந்த, 29ம் தேதி, 1ம் நம்பர் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். பஸ் கண்டக்டர் சக்திவேல், டைம் ஆபீசிற்கு சென்ற நிலையில் அவர் இல்லாமலேயே டிரைவர் பிரபு, பயணிகளுடன் தேன்கனிக்கோட்டைக்கு பஸ்சை ஓட்டி சென்றார்.அந்த பஸ்சில் பெண்களுக்கு இலவசம் என்ற போதும், கண்டக்டர் இல்லாததால் ஆண்களும் இலவசமாக பயணித்தனர். அதனால், அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்துறை அதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை நடத்தனர். தொடர்ந்து, டிரைவர் பிரபுவை சேலம் மாவட்டம், ஆத்துார் தம்மம்பட்டிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.