உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தமிழக முதல்வர் வருகையையொட்டி கி.கிரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

தமிழக முதல்வர் வருகையையொட்டி கி.கிரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

ஓசூர் :தமிழக முதல்வர் வருகை தரும் நிலையில், சிவில் 'ட்ரோன்'களை பறக்க விட, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தடை விதித்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்றும், நாளையும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சிவில் 'ட்ரோன்'கள் (ஆர்.பி.ஏ.எஸ்) பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பேலகொண்டப்பள்ளி, 'தனுஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேசன்' (தால்) நிறுவனத்திற்கு முதல்வர் விமானம் மூலம் வருகை புரிகிறார். பாகலுார் சாலையில், எல்காட் வளாகத்தில், 'அசென்ட் சர்க்யூட்ஸ்' நிறுவன பணிகளை துவக்கி வைக்கிறார். ஓசூர் ஆனந்த் கிராண்ட் பேலஸ் திருமண மண்டபத்தில், தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.குருபரபள்ளி டெல்டா நிறுவன புதிய உற்பத்தி அலகை திறந்து வைக்கிறார். நாளை (செப்.12) கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில், அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மேற்கண்ட இடங்களை மையமாக கொண்டு, 2 கி.மீ., சுற்றளவு பகுதிகள், சிவில் 'ட்ரோன்'கள் பறக்க தடை செய்யப்பட்ட சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இன்று, நாளை என இரு நாட்களும், அப்பகுதிகளில் எந்தவொரு சிவில் 'ட்ரோன்'களும் பறக்க அனுமதி இல்லை. இந்த அறிவிப்பை மீறி 'ட்ரோன்'களை இயக்கும் நபர்கள் மீது, தமிழ்நாடு காவல்துறை சட்டம் மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டப்பிரிவுகளில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை