உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த எலத்தகிரி அருகில் உள்ள முருக்கம்பள்ளம் கிராமம் திரவுபதி அம்மன் கோவிலில், 51ம் ஆண்டு அக்னி வசந்த உற்சவ மகாபாரத விழா கடந்த, 2ல் துவங்கியது. தொடர்ந்து, 18 நாட்கள் நடந்த இவ்விழாவில், மலையூர் ராமர் நாடக கலைக்குழுவினரின் மகாபாரத தெருக்கூத்து நாடகங்கள் நடந்து வந்தது.இதன் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நேற்று நடந்தது.இதற்காக, கோவில் முன்பு, 30 அடி நீள துரியோதனன் உருவ பொம்மை மண்ணால் செய்யப்பட்டிருந்தது. திருநங்கையின் கையால், ஆண்களும், பெண்களும் துடைப்பத்தால் அடிவாங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். நிகழ்ச்சியை, முருகம்பள்ளம், பாலேப்பள்ளி, எலத்தகிரி, மாதன குப்பம், வெண்ணம்பள்ளி, ஜோடு கொத்துார், மாதன குப்பம், மேல் அக்ரஹாரம் என, 8 கிராம மக்கள், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை கண்டு களித்தனர். விழா ஏற்பாடுகளை, 8 கிராம தர்மகர்த்தாக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ