மேலும் செய்திகள்
யானைகளால் அவரை தோட்டம் நாசம்
09-Jul-2025
வனச்சரகங்களுக்கு இடையே விளையாட்டு போட்டி
03-Aug-2025
தளி, தளி அருகே, சரக்கு வாகனத்தில் இருந்த தக்காளி லோடை யானைகள் கீழே தள்ளி சேதப்படுத்தின.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஜவளகிரி, தளி, சூளகுண்டா வனப்பகுதிகளில் மொத்தம், 50க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு ஜவளகிரி வனத்தில் இருந்து வெளியேறிய இரு யானைகள், தளி வனப்பகுதி நோக்கி இடம் பெயர்ந்தன. ஆவேரிப்பள்ளி கேட் பகுதிக்கு நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு யானைகள் சென்றன. அப்போது, காலையில் சந்தைக்கு கொண்டு செல்ல, 70க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பெட்டிகளில் தக்காளியை அடுக்கி, சரக்கு வாகனத்தில் ஏற்றி நிறுத்தியிருந்தனர். இதை பார்த்த யானைகள், சரக்கு வாகனத்தில் இருந்த தக்காளியை சாப்பிட்டன. மேலும், பெட்டிகளை வாகனத்தில் இருந்து கீழே தள்ளி விட்டன.அதில், 30க்கும் மேற்பட்ட பெட்டிகளில் இருந்த, 750 கிலோவிற்கு மேலான தக்காளி கீழே கொட்டி வீணாகின. சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 40 ரூபாய் வரை விற்பனையாகி வரும் நேரத்தில், 750 கிலோவிற்கு மேல் வீணானதால், விவசாயிகள் லுார்துசாமி, லுார்து ஆகியோருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜவளகிரி வனத்துறையினர் பார்வையிட்டபோது, உரிய இழப்பீடு வழங்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். யானைகளால் தொடர்ந்து பயிர்கள் சேதமாகி வரும் நிலையில், வனத்துறை சரியான இழப்பீடு வழங்குவதில்லை என, விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
09-Jul-2025
03-Aug-2025