மேலும் செய்திகள்
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம்
23-Nov-2024
ஓசூர், டிச. 8-ஓசூரில், நேற்று மாலை சிறு, குறு தொழில்முனைவோர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட தொழில் முதலீட்டு கழக மேலாளர் மோகன் ஆகியோர், தொழில்முனைவோர் கடனுதவி பெறுவது குறித்தும், அரசின் மானிய திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர்.தொடர்ந்து, சிறு, குறு தொழில்கள் துவங்கவும், ஏற்கனவே தொழில் செய்து வரும் தொழில்முனைவோர் தங்களது தொழிலை மேம்படுத்தவும், 19 பேருக்கு கனரா வங்கி சார்பில், 21 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டன. அதற்கான ஆணைகளை கனரா வங்கி செயல் இயக்குனர் தேபாஷிஸ் முகர்ஜி, சென்னை சர்க்கிள் முதன்மை பொது மேலாளர் சிந்து, தர்மபுரி மண்டல உதவி பொது மேலாளர் ஆனந்த் ஆகியோர் வழங்கினர். டிவிஷனல் மேலாளர் சிவக்குமார், ஓசூர் ஹோஸ்டியா சங்க முன்னாள் தலைவர் ஞானசேகரன், பொருளாளர் வடிவேல், ஹோஸ்மியா சங்க தலைவர் முருகேசன், உட்பட பலர் பங்கேற்றனர்.
23-Nov-2024