மேலும் செய்திகள்
பல்லடத்தில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமையுமா?
05-Oct-2025
கிருஷ்ணகிரி, அக். 14கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், நீட்டிக்கப்பட்ட, 6 வழிதடங்களுக்கான பஸ் சேவை துவக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர், தி.மு.க.,- எம்.எல்.ஏ., ஆகியோர் கொடியசைத்து, பஸ் சேவையை துவக்கி வைத்தனர்.இதையடுத்து நிருபர்களிடம், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறியதாவது:தர்மபுரி மண்டலத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 109 வழித்தடங்களில், 121 பஸ்கள் மூலம், 280 கிராம, நகரங்களுக்கு செல்லும் பஸ் சேவைகளில், 4,77,594 பேர் பயனடைகின்றனர். மேலும் பழைய புறநகர் பஸ்களுக்கு பதில், 55 புதிய பஸ்கள் மற்றும், 39 புனரமைக்கப்பட்ட பஸ்கள் என, 94 பஸ்களும், மகளிர் விடியல் பயணத்தில் பழைய டவுன் பஸ்களுக்கு பதிலாக, 52 புதிய பஸ்கள், 15 புனரமைப்பு பஸ்கள் என, 67 பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.தற்போது, கிருஷ்ணகிரி முதல் மேல்நுாக்கி செல்லும் பஸ்சை, இட்டிக்கல் அகரம் வரையிலும், திருப்பத்துார் முதல் மத்துார் செல்லும் பஸ், கூடுதலாக ஒரு முறை சென்று வரவும், ஐகுந்தம் செல்லும் பஸ்சை அனகோடி வரை நீட்டித்தும், குருபரப்பள்ளி செல்லும் பஸ்சை எண்ணேகொள்புதுார் வரை நீட்டிப்பு உள்பட, 6 வழித்தட நீட்டிப்பு மற்றும் மாற்றியமைக்கப்பட்ட மகளிர் விடியல் பயணம் செய்யும் பஸ் சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், 7 கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என, 10,581 பேர் பஸ் வசதி பெறுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்ந்து, பர்கூர் வட்டம், கொல்ரூர் பகுதிநேர ரேஷன் கடையையும் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
05-Oct-2025