மனைவியுடன் விவசாயி கள்ளத்தொடர்புசுட்டு கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த ஜேசுராஜபுரம் அருகே அட்டப்பள்ளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 47, விவசாயி. இவரது மனைவி சரோஜா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி மாதேஷுக்கும், 35, கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ராஜேந்திரன் இருவரையும் பலமுறை கண்டித்தும் தொடர்பை துண்டிக்கவில்லை. ஆத்திரமடைந்த ராஜேந்திரன், மாதேஷை கொல்ல முடிவு செய்தார். கடந்த, 2013 டிச.,19ல் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியால், மாதேஷை சுட்டுக்கொன்றார். அஞ்செட்டி போலீசார், ராஜேந்திரனை கைது செய்தனர்.இந்த வழக்கு, ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி சந்தோஷ், நேற்று தீர்ப்பளித்தார். ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் ராஜேந்திரன் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வக்கீல் சின்னபில்லப்பா ஆஜராகினார்.