உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, வாணிஒட்டு திட்டத்தை செயல்படுத்தக்கோரி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க ஆலோசகர் கண்ணையன் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த, 2018ல், எண்ணேகொள் புதுார் கால்வாய் திட்டத்தில், நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. எனவே, இழப்பீட்டு தொகையை இன்றைய சந்தை மதிப்பில் கணக்கிட்டு, நான்கு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த, 6 ஆண்டுகளாக தண்ணீர் இன்றி வறண்டுள்ள கே.ஆர்.பி., அணை இடதுபுற கால்வாயை, சந்துார் வரை துார்வாரி தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.அழியாளம் அணை திட்டத்தை, 200 அடிக்கு உயர்த்தி, 20 அடி அகலத்தில் கால்வாய்களை அகலப்படுத்தும் போது, பாதிக்கப்படும் வீடுகள், ஆழ்துளை கிணறு, தென்னை, மாமரம், பூச்செடிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பெனுகொண்டாபுரம் ஏரியில் இருந்து ரெட்டிப்பட்டி ஏரி வரை உள்ள, 38 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல, புதிய கால்வாய் வெட்டும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய, விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான வாணிஒட்டு அணை திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை