மேலும் செய்திகள்
உழவரைத்தேடி உழவர் நலத்துறை திட்ட முகாம்
12-Jun-2025
ஓசூர் :ஓசூர் அருகே முத்தாலி கிராமத்தில், உழவரை தேடி வேளாண்மை என்ற உழவர் நலத்துறை திட்ட முகாம் நடந்தது. ஓசூர் வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்து, சொட்டு நீர் பாசன விபரங்கள் குறித்து விளக்கமளித்தார். உயிர்ம வேளாண்மை சான்று பெறுவதற்கான வழிமுறைகள், வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டுவதனால் ஏற்படும் நன்மைகள், மதிப்பு கூட்டு பொருட்களை தயாரிப்பது மற்றும் சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள், ஏற்றுமதி உட்பட பல்வேறு ஆலோசனைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மூலம், துறை சார்ந்த மானிய திட்டங்கள், பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.
12-Jun-2025