தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தீயணைப்பு துறையினர்விழிப்புணர்வு நிகழ்ச்சிபென்னாகரம், அக். 10-பென்னாகரம் அடுத்த சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பென்னாகரம் தீயணைப்பு துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.தலைமை ஆசிரியர் பழனி தலைமை வகித்தார். தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் முரளி மற்றும் அவரது குழுவினர் தீர்த்தடுப்பு நடவடிக்கைகள், முதலுதவி, விபத்தில்லா தீபாவளி கொண்டாடுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்விளக்கங்கள் செய்துகாட்டினர். மாணவர்கள், வடகிழக்கு பருவமழையின் போது முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.தீயணைப்பு நிலைய பணியாளர்கள் நரசிம்மன், வினோத்குமார் கேப்டன்ராஜ் சின்னசாமி, ஞானப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.