மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
02-Jul-2025
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தீயணைப்புத்துறை சார்பில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தேன்கனிக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலர் பச்சியப்பன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பள்ளி மாணவ, மாணவியருக்கு, நீர் நிலைகளான ஏரி, குளம், கிணறு மற்றும் ஆறுகளில் தவறி விழுந்தவர்களை எவ்வாறு உபகரணங்களை பயன்படுத்தி மீட்க வேண்டும். முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
02-Jul-2025