கிராமங்களை நோக்கி செல்லும் யானைகள் மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
ஓசூர்: ஓசூர் அருகே, பல்வேறு குழுக்களாக முகாமிட்டுள்ள யானைகள், கிராமங்களை நோக்கி படையெடுத்து வருவதால், வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனச்சரகம், ஊடே-துர்க்கம் காப்புக்காட்டில் குட்டிகளுடன் முகாமிட்டிருந்த, 20க்கும் மேற்பட்ட யானைகள், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறி, வெள்ளிச்சந்தை கிராமம் அருகே, கெலமங்-கலம் - ராயக்கோட்டை சாலையை கடந்தன. அப்போது, இளை-ஞர்கள் சிலர் யானைகளை நோக்கி கூச்சலிட்டு, மொபைல்-போனில் வீடியோ, புகைப்படம் எடுத்து தொந்தரவு கொடுத்தனர். அதனால் யானைகளை விரட்டும் பணி பாதிக்கப்பட்டது. கடை-சியில் சினிகிரிப்பள்ளி கரடு வனப்பகுதியில் யானைகள் தஞ்சம-டைந்தன.அதேபோல், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டி-ருந்த, 25க்கும் மேற்பட்ட யானைகளை, ஜவளகிரி வழியாக கர்நா-டகா நோக்கி விரட்டும் பணி நேற்று முன்தினம் வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. லக்கசந்திரம், சீனிவாசபுரம் கிராமம் வழியாக சென்ற யானைகள், தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையை கடந்து, தாவரக்கரை வனப்பகுதிக்கு சென்றன. அங்கு தற்போது, 25க்கும் மேற்பட்ட யானைகள் ஒரு குழுவாகவும், கிரி என்ற ஒற்றை யானையுடன் மேலும் இரு யானைகள் இணைந்து மற்றொரு குழுவாகவும் உள்ளன.முன்னதாக சாப்ரானப்பள்ளி செல்லும் சாலையில், ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற கிரி என்ற ஒற்றை யானை, விவசாய நிலங்களில் புகுந்து ராகி, சோளம் பயிர்களை தின்றும், காலால் மிதித்து நாசம் செய்து விட்டு, ஒரு மணி நேரம் கழித்து வனப்ப-குதி நோக்கி சென்றது.ஜவளகிரி வனச்சரகம், தேவரபெட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய எட்டு யானைகள், கும்ளாபுரம் பகுதியில் உள்ள நிலங்களில் நேற்று தஞ்சமடைந்து பயிர்களை சேதப்படுத்தின. வனத்துறையினர் விரட்டிய போது, கும்ளாபுரம் - ஆனைக்கல் சாலையை கடந்த யானைகள், கங்கனப்பள்ளி கிராமம் அருகே தைல தோப்பு, தனியார் எஸ்டேட் பகுதியில் சிறிது நேரம் முகா-மிட்டன. காலை நேரத்தில் யானைகளை விரட்டினால், மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தாக்-கப்பட வாய்ப்பிருந்ததால் காலை, 10:00 மணிக்கு மேல் யானை-களை வனத்துறையினர் விரட்டினர்.விவசாய நிலங்கள் வழியாக சென்ற யானைகள், தக்காளி உள்-ளிட்ட பல்வேறு பயிர்களை சேதப்படுத்தி விட்டு, தேவரபெட்டா வனப்பகுதிக்கு சென்றன. கர்நாடகாவின் பன்னார்கட்டா தேசிய பூங்காவில் இருந்து வெளியேறி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை வனச்சரகங்களில் முகாமிட்டுள்ள, 150க்கும் மேற்-பட்ட யானைகள், தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்-றன. கிராமங்களை நோக்கி, தினமும் யானைகள் படையெடுப்-பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.