இலவச மருத்துவ முகாம்
இலவச மருத்துவ முகாம்கிருஷ்ணகிரி, நவ. 5-கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கிராமப்புற சமூக நலவாழ்வு அறக்கட்டளை சார்பில், நாரலப்பள்ளி பஞ்.,க்குட்பட்ட மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ராஜேஷ் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். முகாமில், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, கண் பரிசோதனை, இருதயம் மற்றும் பல் பரிசோதனை, ரத்த வகை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், முதுகு தண்டுவட பரிசோதனை மற்றும் பொது மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.