உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில்எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி

மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில்எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் எஸ்.ஐ., தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும், 25ல், துவங்குகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள போலீஸ் எஸ்.ஐ., தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும், 25 காலை, 10:30 மணிக்கு துவங்குகிறது.இதில், அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும், மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இலவச பாடக்குறிப்புகள் வழங்கப்படும். இத்தேர்விற்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். இத்தேர்வு விபரத்தை, https://www.tnusrb.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த அலுவலகத்தில் பள்ளி பாடப்புத்தகங்கள் உட்பட, 3,000க்கும் மேற்பட்ட நுால்கள் அடங்கிய இலவச நுாலக வசதி, இலவச வைபை கொண்ட பயிலக வசதி போன்ற தேர்வர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளும் உள்ளன. பயிற்சி வகுப்பில் நேர விருப்பமுள்ளவர்கள், https://rb.gy/tns1hq என்ற இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு, 04343 291983 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி