பல இடங்களில் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி கைது
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த மாடரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன், 36. இவர் பெண்களை நோட்டமிட்டு அவர்களின் வீட்டிற்கு சென்று, திருட்டு சம்பவங்கள், பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது உள்ளிட்டவைகளில் கில்லாடியாக செயல்பட்டு வந்தார். இவரை போலீசார் தேடி வந்தனர். இவர் மீது சென்னை மற்றும் பல இடங்களில், 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த மாடரஹள்ளி பகுதியில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் அறிவழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.