மேலும் செய்திகள்
போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
06-Oct-2025
கிருஷ்ணகிரி, நாடு முழுவதும் வரும், 20ல் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில், தீபாவளி பண்டிகைக்காக ஆடுகள் விற்பனை நேற்று ஜோராக நடந்தது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து ஆடுகளை விற்பனைக்காகவும், வாங்குவதற்காகவும், 50,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர். நேற்று காலை, 5:00 மணி முதல் ஆடுகள் விற்பனை நடந்தது. விலை உயர்வு மற்றும் விற்பனை அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 12,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானதால், 10 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
06-Oct-2025