ரூ-.35 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நேற்று வாரச்-சந்தை கூடியது. தர்மபுரி, திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள், விவசாயிகள் ஆடுகள், மாடுகள் மற்றும் விவசாயிகள் வளர்க்க வாங்கிச் செல்லும் ஆட்டின் குட்டிகளை, அதிகளவு கொண்டு வந்திருந்தனர். அதேபோல் ஆடுகள், மாடுகள், வளர்ப்பு குட்டிகளை வாங்க, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வந்து வாங்கிச் சென்றனர். அதன்படி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, 35 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.