உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

போச்சம்பள்ளி,: போச்சம்பள்ளியில் வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் கூடு-வது வழக்கம். வரும், 31ல் தீபாவளி பண்டிகை கொண்டாட உள்-ளதால், நேற்று கூடிய வாரச்சந்தைக்கு தர்மபுரி, திருவண்ணா-மலை மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்து, 3,000க்கும் மேற்-பட்ட ஆடுகளை வியபாரிகள், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதேபோல், பல மாவட்டங்களிலிருந்து ஆடுகளை வாங்க வியாபாரிகளும் அதிகளவு வந்திருந்தனர். இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, 14 கிலோ எடை கொண்ட ஆடு, 12,000 ரூபாய், 18 கிலோ எடை கொண்ட ஆடு, 18,000 ரூபாய், 20 கிலோ எடை கொண்ட ஆடு, 20,000 ரூபாய் என விற்றது.அதேபோல், கிராமப்புறங்களிலிருந்து விவசாயிகள் அதிகளவு நாட்டுக்கோழியை கொண்டு வந்திருந்தனர். கிலோ, 400 முதல், 450 ரூபாய் வரை விற்பனையானது. இதனால், போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, 4 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி