சிந்தல்தொட்டி கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் சேவை
பேரிகை, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பி.எஸ்.திம்மசந்திரம் பஞ்., உட்பட்ட சிந்தல்தொட்டி கிராமத்திற்கு, 50 ஆண்டுக்கும் மேலாக பஸ் வசதி இல்லாததால், மாணவ, மாணவியர், கிராம மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், பஸ் வசதி கேட்டு பேசினார். அதையேற்று, சிந்தல்தொட்டி கிராமத்தில் இருந்து, பேரிகை அரசு மேல்நிலைப்பள்ளி வரை, 24ம் எண் அரசு டவுன் பஸ் இயக்க உத்தரவிடப்பட்டது.நேற்று முதல் முறையாக, பஸ் போக்குவரத்து துவங்கிய நிலையில், எம்.எல்.ஏ., பிரகாஷ் போக்குவரத்தை இயக்கி துவக்கி வைத்து, பேரிகை அரசு மேல்நிலைப்பள்ளி வரை, மாணவ, மாணவியரை பஸ்சை ஓட்டி அழைத்து சென்றார். தி.மு.க., இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஹரிஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.