ரூ.27.91 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிக்கு பூமிபூஜை
ரூ.27.91 லட்சம் மதிப்பிலானவளர்ச்சி பணிக்கு பூமிபூஜைஓசூர், நவ. 26-கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், மல்லசந்திரம் பஞ்., உட்பட்ட என்.எஸ்.,புரம் கிராமத்தில், 14.31 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி கட்டடம் கட்டும் பணி மற்றும் அரசகுப்பம் பஞ்., உட்பட்ட கலகோபசந்திரம் கிராமத்தில், 13.60 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறுதானிய கிடங்கு கட்டும் பணி ஆகியவற்றை, தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். மல்லசந்திரம், பஞ்., தலைவர் சுரேகா முனிராஜ், துணைத்தலைவர் கிரீஷ், ஒன்றிய கவுன்சிலர் திம்மராயப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.