அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்து பழங்குடியினருக்கு வழிகாட்டுதல் பயிற்சி
அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்துபழங்குடியினருக்கு வழிகாட்டுதல் பயிற்சிகிருஷ்ணகிரி, நவ. 15-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சிவா அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனம், மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 25 கிராமங்களின் பழங்குடியின மக்களுக்கு, வன உரிமை சட்டம் சார்ந்து பணியாற்றி வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று, பழங்குடியின மக்களுக்கான அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்து, ஒரு நாள் வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் கலந்து கொண்டு வழிகாட்டுதல்கள் பெற்ற, பழங்குடியின மக்களின் பிரதிநிதிகள், தங்கள் வாழ்விடங்களில் வசிக்கும் மக்களுக்கு, அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்து, விழிப்புணர்வு பரப்புவதற்கான முகவர்களாக செயல்படுவார்கள்.இப்பயிற்சியில், கிருஷ்ணகிரி தாசில்தார் வளர்மதி, வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்தும், மாவட்ட சுகாதாரத்துறை கல்வியாளர் சுரேஷ், மருத்துவ உதவிகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். அதேபோல், ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, மின்சார வாரியம், நேருயுவ கேந்திரா, வாழ்த்து காட்டுவோம் திட்டம் மற்றும் மண்டல சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள், தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்த விபரங்களை எடுத்துரைத்தனர். இதில், பழங்குடியின மக்களுக்கான பிரதிநிதிகளாக, 48 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.