மேலும் செய்திகள்
சித்தேரி மலையில் ஆலங்கட்டி மழை
18-Mar-2026
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இம்மாத துவக்கத்திலிருந்து கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில், தேன்க-னிக்கோட்டை, தளி, ஜவளகிரி சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசியது. ஆனால், திடீர் ஆலங்கட்டி மழையால், தேன்கனிக்கோட்டை, தளி, ஜவளகிரி சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பீன்ஸ், தக்காளி, முட்டைகோஸ் போன்ற பயிர்கள் சேதமாகின. சில அடி ஆழத்-திற்கு விவசாய நிலங்களில் ஆலங்கட்டிகள் விழுந்து கிடந்தன.இது குறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க, மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி கூறுகையில், ''கடந்த, 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆலங்கட்டி மழை பெய்துள்-ளது. பப்பாளி, பூசணி, அவரை, துவரை, ராகி, மா, வெள்ளரி, தக்காளி, முட்டைகோஸ், மலர்கள் போன்ற பயிர்கள் சேதமாகி உள்ளன. இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,'' என்றார்.* கிருஷ்ணகிரியில் கடந்த ஒரு மாதமாக கடும் வெப்பம் வாட்டி வருகிறது. இதனால் பகலில் மட்டுமின்றி இரவிலும் வெப்பக்-காற்று வீசுகிறது. இந்நிலையில் நேற்றிரவு, 7:00 மணி முதல், 8:00 மணி வரை, கிருஷ்ணகிரி நகரில் தொடர்ந்து ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
18-Mar-2026