உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வைக்கோல் லாரி தீயில் எரிந்து நாசம்

வைக்கோல் லாரி தீயில் எரிந்து நாசம்

ஓசூர்: ஓசூரில், வைக்கோல் லோடு ஏற்றி சென்ற லாரி தீ பிடித்து நாச-மானது.கர்நாடகா மாநிலம், மைசூருவில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்திற்கு வைக்கோல் லோடு ஏற்றிய ஈச்சர் லாரி வந்தது. நெடுங்கல் அருகே மோட்டூர் கிராமத்தை சேர்ந்த பழனி, 31, லாரியை ஓட்டினார். ஓசூர் ஜூஜூவாடி, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் மீது லாரி வந்தபோது நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:45 மணிக்கு, லாரியில் இருந்த வைக்-கோலில் தீப்பிடித்தது. இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்-டிகள் பார்த்து கூறியதால், ஈச்சர் லாரி டிரைவர் பழனி, லாரியை நிறுத்தி விட்டு கீழே குதித்து தப்பினார்.ஓசூர் தீயணைப்பு துறையினர் வந்து, நேற்று அதிகாலை, 3:30 மணி வரை போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், லாரி மற்றும் வைக்கோல் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தால், கர்நாடகாவிலிருந்து தமிழகம் வந்த வாகனங்கள் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன. தீயை அணைத்து லாரியை அப்புறப்படுத்திய பின் போக்குவரத்து சீரானது. ஓசூர் சிப்காட் போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை