உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர், சூளகிரியில் கனமழை

ஓசூர், சூளகிரியில் கனமழை

கிருஷ்ணகிரி, அஓசூர், சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. ஓசூரில் நேற்று மாலை, 5:30 மணிக்கு லேசாக துாறலாக துவங்கிய மழை தொடர்ந்து கனமழையாக பெய்தது. இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், ஓசூர் பஸ் ஸ்டாண்ட், ராயக்கோட்டை சாலை சந்திப்பு, மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.t தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய நீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓசூர் சுற்றுவட்டார பகுதியில், நேற்று மாதாந்திர பராமரிப்புக்காக மின்தடை செய்யப்பட்ட நிலையில் நேற்றிரவு வரை மின் இணைப்பு வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதியுற்றனர். அதேபோல சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை, 6:00 மணி பெய்த கனமழையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை