உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் வீரவணக்க நாள் அனுசரிப்பு

கிருஷ்ணகிரியில் வீரவணக்க நாள் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் நேற்று காவலர் தினத்தையொட்டி, வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி., தங்கதுரை ஆகியோர் தலைமை வகித்து, வீரமரணமடைந்த, 191 போலீசாருக்கு, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். போலீசார் அணிவகுப்பு மரியாதை நடத்தி, குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்தாண்டில் பணியின் போது இறந்த, 5 போலீசாரின் குடும்பத்தினருக்கு, கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி., தங்கதுரை இணைந்து, நினைவுபரிசை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை