உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளி மாணவர்கள் வரலாற்று களப்பயணம்

அரசு பள்ளி மாணவர்கள் வரலாற்று களப்பயணம்

கிருஷ்ணகிரி: சிந்து சமவெளி நுாற்றாண்டு விழாவையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து, அரசுப்பள்ளி மாண-வர்களின் வரலாற்று ஆர்வத்தை வளர்க்கும் வகையில், பெற்றோ-ருடன் ஒரு நாள் களப்பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில், 966 ஆண்டு பழமையான, கிருஷ்ணகிரி சோமேஸ்வரர் கோவிலுக்கு சென்று, அங்குள்ள கல்வெட்டுகளை எப்படி படிப்-பது என, மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. அதேபோல், 600 ஆண்டு பழமையான லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில், 1,773ல் கட்டப்பட்ட கோட்டை பள்ளிவாசலில் உள்ள பெர்சிய மொழி கல்வெட்டும் மாணவர்களுக்கு காட்டப்பட்டன. கிருஷ்ணகிரி துாய பாத்திமா அன்னை ஆலயத்திற்கும், பின், மாவட்ட மைய நுாலகத்திற்கும் சென்று, நுாலகத்தில் உள்ள வச-திகள் பற்றியும், குழந்தைகளுக்கான தனி பிரிவு பற்றியும் தெரி-விக்கப்பட்டது. அரசு அருங்காட்சியகம் பற்றி, காப்பாட்சியர் சிவக்குமார் விளக்கினார். ஓய்வு பெற்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ், அகழாய்வு எப்படி நடக்கிறது, அகழாய்வின் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார். அருங்காட்சியகத்திலுள்ள மாதிரி அகழாய்வில், தொல்லியல் பொருட்களை அகழாய்வு செய்து எடுக்கும் செயல்முறை செய்து காண்பிக்கப்பட்டது.இதில், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், பாலாஜி, விஜய-குமார், செல்வகுமார், சாதிக் உசேன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ