கட்டட பணி முழுமையாக முடிக்காத நிலையில் திறக்கப்பட்ட ஓசூர் ஜி.ஹெச்.,
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள ராயக்-கோட்டை சாலையில், நாளிகபெட்ட அக்ரஹாரம் பகுதியில், 6 ஏக்கர் பரப்பளவில், 100 கோடி ரூபாய் மதிப்பில், 419 படுக்கை வசதிகளுடன், ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவம-னைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தற்போது ஓசூர், தேன்கனிக்கோட்டை சாலையில், அரசு மாவட்ட தலைமை மருத்துவ-மனை இயங்குகிறது. இங்குள்ள பிணவறையில், 4 சடலங்களை மட்டுமே வைக்க முடியும். ஓசூர் மாநில எல்லையில் உள்ளதால், அடையாளம், தெரியாமல் இறக்கும் நபர்கள் எண்ணிக்கை அதி-கமாக உள்ளது. அதை கணக்கில் கொள்ளாமல், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில், 6 குளிர்சா-தன பெட்டிகளுடன் மட்டுமே பிணவறை கட்டப்-பட்டுள்ளது.மேலும், ஆக்சிஜன் யூனிட் பணிகள் முழுமை பெறவில்லை. ஆங்காங்கு பார்க்கிங் பகுதிகளில் கற்கள் பதிக்கவில்லை. கழிவுநீர் கால்வாய் பணிகள் முடியவில்லை. 6 தளங்களிலும் அங்-கொன்றும், இங்கொன்றுமாக பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்திற்கு, மின் இணைப்பு கூட வழங்கப்ப-டாமல் உள்ளது. சமையல் அறையின் தரைகளில் டைல்ஸ் கற்கள் சரியாக பதிக்காமல், நடந்து சென்றால் அசைவுகள் உள்ளன. தேர்தல் நெருங்-குவதால் தேதி அறிவிக்கப்பட்டு விடும் என நினைத்து, நேற்று அவசர கோலத்தில் மருத்துவ-மனை திறக்கப்பட்டுள்ளது.குற்றச்சாட்டுகடந்த, 2 ஆண்டுகளாக மருத்துவமனை கட்டு-மான பணியை மேற்கொண்ட, குடியாத்தத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் சுரேஷ்மணி, சமையல் கூடம், பிணவறை போன்றவற்றை சரியாக கட்ட-வில்லை, கூடுதல் டாக்டர்களும் நியமிக்கப்பட-வில்லை என, திறப்பு விழாவிற்கு வந்த, வி.சி., கட்சியினர் நேற்று குற்றம்சாட்டினர். நியமனம் இல்லைகிருஷ்ணகிரியில், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இருந்தபோது அங்கு, 80க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியாற்றினர். அது மருத்-துவக்கல்லுாரி மருத்துவமனையாக மாற்றப்பட்-டது. இதையடுத்து, ஓசூரில் இருந்த அரசு மருத்து-வமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை-யாக தரம் உயர்த்தப்பட்டு, 2 ஆண்டுகளாகி விட்-டன. ஆனால் இங்கு பணியாற்றும், 15 டாக்டர்-களில், சுழற்சி முறையில் வரும்போது, 9 டாக்-டர்கள் மட்டுமே பணியில் இருப்பர். இந்த எண்-ணிக்கையை உயர்த்தாமல், புதிய கட்டடத்தை மட்டும் முதல்வர் திறந்து வைத்துள்ளார். இதே அளவு டாக்டர்களுடன், பிரமாண்ட புதிய கட்ட-டத்திற்கு மருத்துவமனை இடமாற்றம் செய்யப்-பட்டால், நோயாளிகள் நிலைமை மோசமாகி விடும் என, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.தி.மு.க.,வினர் அதிர்ச்சிஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை திறப்பதற்கு முன், அங்குள்ள சமையல் அறையில் பால் காய்ச்சி ஊழியர்கள் குடித்து விட்டு, அப்படியே வைத்து விட்டு சென்றனர். இதை பார்த்து, தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்-தனர்.