உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்களுக்கு உடனடி தீர்வு

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்களுக்கு உடனடி தீர்வு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், நரிமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சவுட்டஹள்ளி மற்றும் சந்தாபுரம் பஞ்.,களுக்கு, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது.மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, பல்வேறு குறைகள் குறித்து வழங்கிய, 50க்கும் மேற்பட்ட மனுக்களில், 30க்கும் மேற்பட்டவைகளுக்கு உடனடி தீர்வு காண உத்தரவிட்டார்.தொடர்ந்து, 2 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள், ஒரு பயனாளிக்கு ரேஷன் கார்டில் பெயர் மாற்றத்திற்கான ஆணை, ஒருவருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணையை உள்ளிட்டவைகளை வழங்கினார்.தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், தனி தாசில்தார் மகேஸ்வரி, பி.டி.ஓ., சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை