மரத்தை வெட்டிய தனி நபர்கள் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அம்பேத்கர் நகரில் நாகராஜன் கோவில் உள்-ளது. இதை சுற்றி ரட்சை அமைத்து, அரச மரம் மற்றும் வேப்ப மரம் வளர்க்கப்பட்டுள்ளது. ரச்சைக்கு அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபடுவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை, அரச மரத்தை அப்பகுதியை சேர்ந்த சிலர் வெட்டுவதாக, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்காவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேன்கனிக்கோட்டை தாசில்தார் கோகுல்நாத், ஆர்.ஐ., பசவராஜ், வி.ஏ.ஓ., வரதராஜ் ஆகியோர் அங்கு சென்று, மரத்தை வெட்டியவர்களை தடுத்து நிறுத்தினர்.அவர்களிடம் விசாரித்தபோது, அப்பகுதியை சேர்ந்த தனிநபர் வீடு மீது, மரக்கிளைகள் விழுந்ததால், ஆட்களை வைத்து வெட்-டுவது தெரிந்தது. மரத்துண்டுகளை கைப்பற்றிய வருவாய் துறை-யினர், தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். உரிய அனுமதியின்றி மரத்தை வெட்டியவர்களுக்கு அபராதம் விதிக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.