உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருந்த சுப்பிரமணியம், தேர்தல் காரணத்தால், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில், கெலமங்கலம் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த சங்கர், ஓசூர் டவுன் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். கெலமங்கலம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக இருந்ததால், சேலம் மாவட்டம், ஓமலுார் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த சதீஷ், கெலமங்கலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, நேற்று பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி