முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கிராம மக்களுக்கு அழைப்பிதழ்
ஊத்தங்கரை :மதுரையில் வரும், 22ம் தேதி நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டி, ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலுள்ள கிராமங்கள் தோறும், வீடு வீடாக சென்று முருக பக்தர்கள் அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.ஊத்தங்கரை, கல்லாவி, சாமல்பட்டி, அனுமன் தீர்த்தம், சிங்காரப்பேட்டை, காரப்பட்டு மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராமங்கள் தோறும், முருக பக்தர்கள் மாநாடு அழைப்பிதழை பக்தர்கள், கோவில் பூசாரிகள், ஆன்மிகவாதிகள், தன்னார்வலர்கள், இந்து முன்னணி நிர்வாகிகள், பா.ஜ., நிர்வாகிகள், ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக சென்று, வரும், 22ம் தேதி மதுரையில் நடக்க உள்ள முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெறும் வகையில், அனைவரும் குடும்பத்துடன் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பிதழை வழங்கி வருகின்றனர்.