கர்நாடகாவிலிருந்து பலத்த பாதுகாப்புடன் வாகனத்தில் வந்த ஜெயலலிதாவின் நகைகள்
ஓசூர்: தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்-றத்தில் நடந்தது. அதனால், ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, 27 கிலோ தங்க, வெள்ளி, வைர நகைகள், கர்நா-டக அரசின் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசில் ஒப்படைக்க சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகைகள் சரிபார்க்கப்-பட்டு, கர்நாடகா தலைமை செயலக கருவூலத்தில் மீண்டும் வைக்கப்பட்டன.நேற்று, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஜெயலலிதாவின் நகைகள், தமிழக போலீசார் கொண்டு வந்த வாகனத்தில் ஏற்றப்-பட்டு, தமிழக அரசிடம் ஒப்படைக்க எடுத்து வரப்பட்டன. கர்நா-டகா மாநில எல்லையான அத்திப்பள்ளிக்கு நேற்று மாலை, 5:45 மணிக்கு வாகனம் வந்தது. அம்மாநில எல்லை வரை, கர்நாடகாவின் ஹலசூரு கேட் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்தனர். தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை எஸ்.ஐ., நாராயணன் தலைமையிலான போலீசார், நகை வந்த வாகனத்தை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்-றனர். வேலுார் மாவட்ட எல்லையில், அம்மாவட்ட போலீசா-ரிடம் பாதுகாப்பு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.