மேலும் செய்திகள்
பிளக்ஸ் போர்டு, சால்வை அணிவிப்பதை தவிர்க்க வேண்
19-Nov-2024
அண்ணனுக்கு கல்தா; தம்பிக்கு பதவிகாவேரிப்பட்டணம் தி.மு.க.,வில் அதிரடிகிருஷ்ணகிரி, நவ. 28-காவேரிப்பட்டணம், தி.மு.க., பேரூர் செயலாளரை பொறுப்பிலிருந்து நீக்கி, அவரது தம்பிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. இதுகுறித்து தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், தி.மு.க., பேரூர் செயலாளர் ஜே.கே.எஸ்.,பாபு சரிவர கட்சிப்பணி ஆற்றாததால், அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக ஜே.கே.எஸ்., சாஜித் என்பவர் நியமிக்கப்படுகிறார். அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து தி.மு.க.,வினர் கூறுகையில், 'ஜே.கே.எஸ்., பாபு, மாவட்ட, உள்ளூர், தி.மு.க.,வினரிடம் இணக்கமாக நடந்து கொள்ளவில்லை. கடந்த, 15 நாட்களுக்கு முன் காவேரிப்பட்டணத்தில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் சக்கரபாணியிடம், 'நிகழ்ச்சி ஏற்பாட்டை நான்தான் செய்தேன், என் பெயரை சொல்லாமல் நீங்கள் எப்படி பேசலாம்' என, அங்கேயே கேட்டு தகராறு செய்தார், அவரின் இதுபோன்ற செயல்களால்தான் அவர் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது தம்பி ஜே.கே.எஸ்., சாஜித்துக்கு பொறுப்பு வழங்கியது கட்சி தலைமையின் முடிவு' என்றனர்.
19-Nov-2024