உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பத்தாம் வகுப்பு தேர்வில் 94.64 சதவீத தேர்ச்சி மாநில அளவில் 16வது இடம் பிடித்த கிருஷ்ணகிரி

பத்தாம் வகுப்பு தேர்வில் 94.64 சதவீத தேர்ச்சி மாநில அளவில் 16வது இடம் பிடித்த கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, பத்தாம் வகுப்பு தேர்வில், கிருஷ்ணகிரி மாவட்டம், 94.64 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில், 16வது இடம் பிடித்தது.தமிழகம் முழுவதும், நேற்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி விபரங்கள் வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டதில், 395 அரசு, அரசு நிதியுதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 24,191 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில், 22,895 பேர் தேர்ச்சியுடன், 94.64 சதவீத அளவிலானோர் தேர்ச்சி பெற்றனர்.தேர்வெழுதிய, 12,390 மாணவர்களில், 11,503 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம், 92.84 சதவீதம். அதேபோல தேர்வெழுதிய, 11,801 மாணவியரில், 11,392 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம், 96.53 சதவீதம். அரசு பள்ளிகளில் பயின்ற, 16,685 மாணவ, மாணவியரில், 15,529 பேர் அதாவது, 93.07 சதவீத அளவில் தேர்ச்சி பெற்றனர்.167 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சிமாவட்டம் முழுவதும் தேர்வில் பங்கேற்ற, 395 பள்ளிகளில், 5 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 95 அரசுப்பள்ளிகள் மற்றும் 67 தனியார் பள்ளிகள் உள்பட, 167 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றன. கிருஷ்ணகிரி மாவட்டம், 94.64 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில், 16வது இடத்தை பிடித்தது. கடந்தாண்டு மாநிலஅளவில், 25வது இடத்தை பிடித்த கிருஷ்ணகிரி மாவட்டம், தற்போது, 9 இடங்கள் முன்னேறி, 16வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி