மேலும் செய்திகள்
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு
21-Apr-2025
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 2 மாதங்களாக வெயில் கடுமையாக வாட்டி வருகிறது. பொதுமக்கள் சாலையில் நடக்கவே அச்சப்பட்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் சற்று வெப்பம் தணிந்த நிலையில், தற்போது மழையின்றி மீண்டும் வெயில் கடுமையாக வாட்டி வருகிறது. நேற்று கிருஷ்ணகிரியில், 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது. இதனால் பெரும்பாலான சாலைகள், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின.தேசிய நெடுஞ்சாலையில் தோன்றிய கானல் நீரில் வாகனங்கள் மிதந்து சென்றன. பகலில் மட்டுமின்றி, இரவிலும் வெப்பக் காற்று வீசி வருவதால், பொதுமக்கள் துாக்கமின்றி சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் மழையை எதிர்பார்த்து, விவசாயிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.மாவட்டத்தில் பெய்த மழையால் கடந்த, 21ல் கே.ஆர்.பி., அணைக்கு வினாடிக்கு, 259 கன அடியாக நீர்வரத்து இருந்தது. பின் மழையின்றி, 184 மற்றும், 128 கன அடியாக நீர்வரத்து குறைந்து வந்த நிலையில் நேற்று, 72 கன அடியாக நீர்வரத்து வெகுவாக குறைந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 12 கன அடி மட்டுமே தண்ணீர் திறந்துள்ள நிலையில், அணை மொத்த உயரமான, 52 அடியில், 48.95 அடியாக நீர்மட்டம் இருந்தது.
21-Apr-2025