உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கட்டட மேஸ்திரியை தாக்கியவருக்கு வலை

கட்டட மேஸ்திரியை தாக்கியவருக்கு வலை

பேரிகை; கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த முது-குறுக்கி அருகே எஸ்.தட்டனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 50. கட்டட மேஸ்திரி; கடந்த, 11ம் தேதி இரவு டி.குருபரப்பள்ளி பகு-தியில் கட்டட வேலையை முடித்து விட்டு, அப்ப-குதியில் உள்ள மாந்தோப்பில் தங்கினார்.அவருடன் அடையாளம் தெரியாத நபர் ஒரு-வரும் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் காலை, முகம், தலை உள்ளிட்ட இடங்களில் காயங்க-ளுடன் ஆறுமுகம் விழுந்து கிடந்தார்.இதை பார்த்த பொதுமக்கள், அவரது மனைவி பூங்கொடிக்கு தகவல் தெரிவித்தனர். கிருஷ்ண-கிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவம-னையில் ஆறுமுகம் அனுமதிக்கப்பட்டார். அவ-ருடன் தங்கியிருந்த அடையாளம் தெரியாத நபர் தான், தாக்கியிருக்க கூடும் என, போலீசார் சந்-தேக்கின்றனர். பூங்கொடி புகார் படி, மர்ம நபரை பேரிகை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை