வழித்தட பிரச்னையில் விவசாயியை தாக்கியவர் கைது
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அடுத்த சாப்பர்த்தியை சேர்ந்தவர் விஸ்வநாதன், 60. புங்கம்பட்டியை சேர்ந்தவர் அருள், 56. விவசாயிகள். இவர்களின் நிலம் அருகருகே உள்ளன. இவர்களுக்குள் வழித்தட பிரச்னை இருந்து வந்த நிலையில் கடந்த, 12ல், ஏற்பட்ட தகராறில் விஸ்வநாதனை, அருள் இரும்பு கம்பியால் தாக்கி மிரட்டல் விடுத்தார். விஸ்வநாதன் புகார் படி காவேரிப்பட்டணம் போலீசார் அருளை கைது செய்தனர்.