மேலும் செய்திகள்
முகாமிட்ட 85 யானைகளை விரட்ட முடியாமல் தவிப்பு
13-Nov-2024
வனத்தில் விலங்கு வேட்டைக்குதுப்பாக்கியுடன் சுற்றியவர் கைதுஅரூர், நவ. 15- அரூர் அடுத்த செல்லம்பட்டி பன்னிமடுவு வனச்சரகத்தில், வாதாப்பட்டி பிரிவு வனவர் சாக்கப்பன் மற்றும் வனக்காப்பாளர் ரமேஷ்குமார் ஆகியோர் கடந்த, 1ல் இரவு, 11:50 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். பொய்யப்பட்டியில் இருந்து அனுமன்தீர்த்தம் செல்லும் வனப்பகுதியை ஒட்டிய சாலையில், பைக்கில் நாட்டுத்துப்பாக்கியுடன் வந்த, 2 பேரை வனத்துறையினர் பிடிக்க முயன்றபோது தப்பினர். விசாரணை மேற்கொண்டதில் வேப்பம்பட்டியை சேர்ந்த மாரியப்பன், 48, அவரது உறவினர் கனிஷ் என்பதும், அவர்களுக்கு துப்பாக்கி வழங்கியது திருமூர்த்தி என்பதும் தெரியவந்தது. நேற்று முன்தினம் மாரியப்பனை கைது செய்த வனத்துறையினர், அவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்து, தலைமறைவான கனிஷ் மற்றும் திருமூர்த்தியை தேடி வருகின்றனர்.
13-Nov-2024