உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கொம்புடன் 2 மான் தலைகள் வைத்திருந்தவர் கைது

கொம்புடன் 2 மான் தலைகள் வைத்திருந்தவர் கைது

வேலுார், வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூபதி, 50. விவசாய கூலி தொழிலாளி. இவரது வீட்டில், 2 கொம்புகளுடன், 2 மான் தலைகள் இருப்பதாக ஒடுகத்துார் வனச்சரக அலுவலர் வெங்கடாசலத்திற்கு புகார் சென்றது. நேற்று அங்கு சோதனை செய்தபோது, வீட்டின் சுவரில் கொம்புடன் இரு தலைகள் இருந்ததை கண்டு பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார். சில ஆண்டுகளுக்கு முன், வனப்பகுதிக்கு பூபதி சென்றபோது அங்கு, இறந்து, காய்ந்து கிடந்த, 2 மானின் தலைகளை எடுத்து வந்து, வீட்டு சுவரில் மாட்டி வைத்திருந்தது தெரியவந்தது. வனத்துறையினர் பூபதியை கைது செய்து, 25,000 ரூபாய் அபராதம் வசூலித்து,எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ