உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.1.93 லட்சம் குட்கா காரில் கடத்தியவர் கைது

ரூ.1.93 லட்சம் குட்கா காரில் கடத்தியவர் கைது

கிருஷ்ணகிரி, பர்கூர் எஸ்.ஐ., அமர்நாத் மற்றும் போலீசார், பர்கூர் கூட்ரோடு, ஜெகதேவி சாலையில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரை நிறுத்தினர். காரை நிறுத்திய டிரைவர், தப்பித்து ஓடினார். காரை சோதனையிட்டதில், 267 கிலோ அளவில், 1.93 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை குப்பத்திலிருந்து, பர்கூர் வழியாக கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து காரில் இருந்த ஜெகதேவி, ஞானாம்மாள் காலனியை சேர்ந்த நதீம், 27 என்பவரை போலீசார் கைது செய்தனர். காருடன், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவரான, ஆந்திராவை சேர்ந்த பாபுசிங், 28, என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி