உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாய நிலத்தில் ஒயர் திருடியவர் கைது

விவசாய நிலத்தில் ஒயர் திருடியவர் கைது

கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த மல்லப்பாடியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மனைவி ஜெயராணி. இருவரும் நேற்று முன்தினம், விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது அவர்களுடைய விவசாய கிணற்றில் இருந்த மின்மோட்டாரில், மர்ம நபர் ஒருவர் ஒயர்களை திருட முயற்சித்து கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன், ஒயர் திருடிய நபரை பிடித்து பர்கூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், திருப்பத்துார் மாவட்டம், ஏரிகோடியை சேர்ந்த சிவா, 28, என்பதும் ஆளில்லாத நிலங்களில் மோட்டார் மற்றும் ஒயர்களை திருடி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி