உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / துப்பாக்கியை காட்டி மிரட்டியவருக்கு வலை

துப்பாக்கியை காட்டி மிரட்டியவருக்கு வலை

ஓசூர்; ஓசூர், சமத்துவபுரத்தை சேர்ந்த பெண் முத்தா, 35. இவர், நல்லுார் வட்டார போக்குவரத்து அலுவ-லகம் அருகே, பழைய இரும்பு பொருட்கள் விற்-பனை கடை நடத்தி வருகிறார். கடந்த, 25 மாலை அவரது கடைக்கு, 30 வயதுள்ள நபர் புல்லட்டில் வந்தார். கைத்துப்பாக்கி ஒன்றுடன் வந்த அவர், திருடப்-பட்ட பேட்டரிகள் கடையில் உள்ளதாக தகவல் வந்துள்ளது, தான் போலீஸ் என்றும், தங்களிடம் விசாரிக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் பணம் கேட்டு மிரட்டினார். அவரது நடவடிக்-கையில் சந்தேகமடைந்த முத்தா, தன் மொபைலில் அவரை வீடியோ எடுத்தார். இதை பார்த்த அவர் அங்கிருந்து தப்பினார். முத்தா புகார்படி நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை