உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெண் படத்தை மார்பிங் செய்த நபர் அடித்துக்கொலை

பெண் படத்தை மார்பிங் செய்த நபர் அடித்துக்கொலை

குருபரப்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அடுத்த குப்பச்சிப்பாறையை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் பிரபு, 40; போட்டோகிராபரான இவர் திருமணமாகாதவர்.இவரது எதிர் வீட்டில் கோவிந்தராஜ் - ஜெயமணி தம்பதி வசிக்கின்றனர். இவர்கள் இரு குடும்பத்திற்கும் இடையே பாதை பிரச்னை இருந்தது. ஏற்கனவே, ஜெயமணியை தாக்கியதாக பிரபு மீது வழக்கும் உள்ளது. இந்நிலையில், ஜெயமணியின் புகைப்படத்தை கேலியாக சித்தரித்து, மொபைல் போனில் சிலருக்கு பிரபு அனுப்பியுள்ளார். கடந்த, 7ம் தேதி மதியம், 3:00 மணிக்கு, பிரபு வீட்டிற்கு, ஜெயமணி தரப்பை சேர்ந்த வருண்குமார், 42, ராகவேந்திரன், 38, உட்பட ஏழு பேர் சென்றனர். மொபைலில், 'மார்பிங்' செய்தது குறித்து கேட்ட போது, வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்த பிரபு, வருண்குமார், ராகவேந்திரனை தாக்கினார். ஆத்திரமடைந்த ஜெயமணி தரப்பினர் தாக்கியதில் பிரபு, நேற்று அதிகாலை இறந்தார்.குருபரப்பள்ளி போலீசார், பிரபுவை அடித்துக் கொன்ற வருண்குமார், ராகவேந்திரன், உட்பட ஆறு பேரை கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை