ஸ்ரீ சத்குரு நாராயண தத்தா கோவிலில் மார்கழி திருவிழா
ஓசூர், :ஓசூர், குமுதப்பள்ளியில் உள்ள ஸ்ரீ சத்குரு நாராயண தத்தா கோவிலில், நேற்றுமுன்தினம் மார்கழி மாத பூஜை நிறைவடைந்தது.இதையடுத்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலையில் பஜனை பாடல்கள் பாடி, சுவாமி சிலை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. கோவிலில் ஸ்ரீராமமூர்த்தி பூஜை, கோமாதா பூஜை, சத்குரு நாராயண தத்தா பூஜை, பீமலிங்கேஸ்வரா பூஜை, ஐயப்பன் பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.