உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிட்டம்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா

கிட்டம்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, கிட்டம்பட்டி கிராமம் மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு, சேலம் சாலை வரை சென்று, பின்னர் கோவிலுக்கு வந்தனர்.இதில், பக்தர்கள் அம்மனையும், பூசாரி கரகம் சுமந்தும், ஏராளமான பெண்கள் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி, அம்மன் வேடம் அணிந்து வேண்டுதல் நிறைவேற்றினர். கோவிலில் மாவிளக்கை அம்மனுக்கு படைத்து, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். கிராம மக்கள், தங்கள் உறவினர்களுக்கு கறிவிருந்து சமைத்து உபசரித்தனர். நிகழ்ச்சியில், 1,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை