உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பர்கூர் அருகே அரசு பள்ளியில் அமைச்சர் ஆய்வு

பர்கூர் அருகே அரசு பள்ளியில் அமைச்சர் ஆய்வு

பர்கூர் அருகே அரசுபள்ளியில் அமைச்சர் ஆய்வுகிருஷ்ணகிரி, நவ. 6-கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வந்தார்.கிருஷ்ணகிரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் சி.இ.ஓ., அலுவலகத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து நேற்று பர்கூர் ஒன்றியம் அஞ்சூர்-ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார். பள்ளி நுாலகம், மாணவ, மாணவியரின் கற்றல்திறன் குறித்து ஆய்வு செய்தார்.கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான மதியழகன் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ