மேலும் செய்திகள்
தி.மு.க., நலத்திட்ட உதவிகள் வழங்கல்
14-Jul-2025
சூளகிரி, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி, துப்புகானப்பள்ளி பஞ்., உட்பட்ட சின்ன பேட்டகானப்பள்ளி கிராமத்தில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது, குடிநீர் வசதி, மயானம், பஸ் வசதி, கழிவுநீர் கால்வாய், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என, மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை கேட்டறிந்த அவர், படிப்படியாக நடவடிக்கை எடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். ஒன்றிய செயலாளர்கள் பாபு வெங்கடாசலம், பாலசுப்பிரமணியம், மாதேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.
14-Jul-2025